Friday, 4 February 2011

கோ சமூய்.[Koh Samui]


கோ சமூய்.தாய்லாந்த் நாட்டில் அதிகம் அறியப்படாத  இடங்களில்  இதுவும் ஒன்று.அநேகம் பேர் பாங்காக்,பட்டையா.. இன்னும் சிலர்  புக்ஹெட் வரை செல்கிறார்கள். நம் சுந்தர் தான் இது போன்ற அழகிய இடங்களையும் அறிந்து அழைத்து சென்றான். 'Koh' என்றால் 'தாய் ' மொழியில் தீவாம். இங்கு எங்கு காணினும் குட்டி குட்டி தீவுகள்.அனைத்தும் விதம் விதமாக அழகு.  4 நாள் pacakge tour இல் நிறைய அனுபவங்கள்.சுந்தர் தன் இரு குழந்தைகளையும் [பரத்,பாவனா] அழைத்து  வந்திருந்தான்.ஆக,[நான்,சந்தோஷ்,பாலாஜி யுடன்] நாங்கள் மொத்தம் 6 பேர் .
சுந்தர் பாங்காக் அருகில் 130km   தொலைவில் இருக்கும்  'பட்டையா' வில் தான் இருக்கிறான்.நாங்கள் பாங்காக் லிருந்து விமானம் மூலம்  'Surat tani ' என்ற இடம் வரை சென்று,பிறகு அங்கிருந்து  ferry  மூலம் கோ சமூய் சென்றடைந்தோம். மொத்தம் கிட்டத்தட்ட 1000km இருக்கும் [ from Bangkok ].
Flight இல் ஒரு மணி நேரமும்,Bus இல்[Surat Tani to Pier]  2 மணி நேரமும்  ferry இல் 2 மணி நேரமும் பயணித்திருப்போம். ஆனால் break உடன் 6 மணி நேரப்பயனமாகிவட்டது. காலை  7 மணிக்கு புறப்பட்ட நாங்கள்  கோ சமூய் வந்தடைய  மதியம் 1 மணி ஆகிவிட்டது. மதிய உணவை resort லியே முடித்துவிட்டு  local site seeing கிளம்பிவிட்டோம். தாய்லாந்த் முழுக்க motorcycle [scooty type] வாடகைக்கு தருகிறார்கள். நாங்களும் 2 வண்டிகளில் புறப்பட்டு சென்றோம்.அன்றைய நிகழ்வுகளையும் எடுத்த படங்களையும் slideshow வில்  கீழே பார்க்கவும்.




Tuesday, 25 January 2011

தாய்லாந்த் கனவுகள்

தாய்லாந்த். கேரளாவை  எப்படி God's Own country என்று இங்கு சொல்கிறார்களோ, தாய்லாந்தை God's Own world என்று சொன்னால் மிகையல்ல. இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லை.அதை explore செய்யும் 'தாய் ' அரசு ,அதை  full professionalism உடன் செய்கிறது. உலக tourist களின் சங்கமத்தை அங்கு காணமுடிகிறது. அங்கு குடும்பத்தோடு வசிக்கும் என் Cousin Brother சுந்தர், 8 வருடங்களாய்  அழைத்தும் இப்போதுதான் போக முடிந்தது,தனியாக! கூட company கொடுத்தது என்னுடைய மற்ற cousin brothers களான சந்தோஷ் [சென்னை ] மற்றும் பாலாஜி [ஷார்ஜா ]. December end.... X-mas & New-year vacation என்பதால் அங்கு set சேர்ந்துவிட்டோம். சுந்தர்,15 நாட்களுக்கு அருமையாக program போட்டு வைக்க,சுபயோக சுபதினத்தில் நாங்கள் அனைவரும் அங்கு ஆஜர்.

தாய்லாந்தும்  இந்தியா போல நிறைய பிராந்தியந்களாய் பிரிந்திருகின்றன.Bangkok தலைநகரம். நம் பாண்டிச்சேரி எப்படி 'மது ' வுக்கு பெயர் போனதோ அதுபோல  அங்கு Pattaya [ 'பட்டாயா']. இது 'மாது' வுக்கு famous. Wholesale முதல் retail வரை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.தவிர, Phuket, KhoSamui, ChangMai, SukoThai, ChangRai  போன்ற எண்ணற்ற சுற்றுலா ஸ்தலங்கள் தாய்லாந்தில் உள்ளது.
இதில் நாங்கள் சென்ற சில இடங்களை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.வழக்கம் போல Pics களை Sildeshow இல் caption உடன் கொடுத்துள்ளேன்.வீடியோ link களையும் கொடுக்கிறேன். ரசித்தவை பற்றி  கருத்து  எழுதினால் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

கீழே  கொடுக்கபட்டுள்ள   படங்கள் நான் சென்று ரசித்த இடங்களின் ஒரு தொகுப்பு மட்டுமே.அந்தந்த இடங்களின் சிறப்புகளும் pics களும் தனித்தனியே  கொடுக்கவுள்ளேன்.