Sunday, 13 May 2012

Tada Falls

சென்னை அருகே இந்த கோடை காலத்தில்  ஒரு நீர்வீழ்ச்சிற்கு சென்று வர முடியுமா?அதுவும் தீம் பார்க் falls இல்லை.  இயற்கை falls.  முடியுமே..!! எப்படி? எங்கே? இதோ அதற்கான   விடை :

தடா falls.

சென்னையிலிருந்து 60km தொலைவில் உள்ளது தடா. ஆந்திரா மாநிலம் border . அங்கிருந்து காலஹஸ்தி சாலையில் ஒரு 25km கப்பி ரோட்டில் சென்றால்..தடா falls வருகிறது.வழியில் கல்கி பகவான் ஆஸ்ரமம் பார்க்கலாம். அவசியம் வாகனம் தேவை. தடா வரை NH . அருமையான சாலை. அதன் பிறகு மட்டமான சாலை.[சாலை என்று ஒன்று உள்ளதா?]

Base camp சென்றவுடன் வாகனத்தை park செய்துவிட்டு நடக்க வேண்டியது தான். கையில் சாப்பாடு,தண்ணீர் மிக அவசியம். fresh water வருகிறது  என்றாலும் hygiene  இல்லை. மக்கள் நாசம் செய்துவிடுகிறார்கள்.
இந்த மலையில் நீர்விழ்ச்சியா என்று நம்ப முடியாதபடி தான் உள்ளது செல்லும் பாதை.ஆனால், மூன்று அல்லது நாலு km சென்ற பின் falls -இற்கான சுவடுகள் தெரிகிறது.

வழி நெடுக மிகவும் பெரிய பெரிய பாறைகள் உள்ளன..High Jump , long jump எல்லாம் செய்தாக வேண்டும். ஒரு கட்டத்தில் rock climbing செய்தாக வேண்டும். அனைத்தும் செய்தாலும் கடைசியில் நீச்சல் செய்தாக வேண்டும். அப்போது தான் falls -ஐ பார்க்கவோ அதில் குளிக்கவோ முடியும். கிட்டத்தட்ட குற்றாலத்தில் தேனருவி செல்லும் அனுபவம் ஏற்படுகிறது. உயரே போக முடியாதவர்கள், கீழேயே குளிக்க தண்ணீர்  தடாகம் உள்ளது. அங்கயே கும்மி அடிக்கலாம். எங்களில் சிலர்  அதை தான் செய்தனர். 
 
கோடை காலத்திலியே நீர் வருகிறது என்றால் நிச்சயம் மழைக்காலத்திற்கு  பிறகு அருமாயாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உச்சி வரை செல்ல முடியாவிட்டாலும் வழி நெடுகிலும் நிச்சயமாக குளிக்க அருமையான இடங்கள் உள்ளன. அதில் வரும் நீரை என் ஞானகன்னால்  காண முடிகிறது. [குற்றால அனுபவம் சுவாமி]. எனவே, ஒரு நாள் picnic செல்ல நினைப்பவர்கள் நிச்சயமாக தடா falls செல்லலாம்.
 
தடா falls பயண அனுபவங்களை போடோவாகவும் வீடியோ வாகவும் கீழே slideshow -இல் காணவும். நன்றி.



         

 

 You-tube link: http://www.youtube.com/watch?v=vWgCN-KlLlM&feature=g-upl