Wednesday, 10 November 2010

கர்நாடகம்.

கர்நாடகம்.எவ்வளவு முறை சென்றாலும் சலிக்காத மாநிலம்.
அவ்வளவு இயற்கை வளம். இனிமையான மனிதர்கள்.'காவிரி' பிரச்னையினால் வேற்றுமை-வெறுப்பு ஏற்பட்டாலும் , அதையும் கடந்து பார்த்தால்,அது ஒரு 'tourist paradise ' என்றால் மிகையல்ல. அனேகம்பேர் Bangalore-Mysore தான் கர்நாடகாவில் சுற்றுலா இடங்கள் என நினைக்கிறார்கள்.இன்னும் சிலர் ,குடகு, பேலூர்,ஹலேபெட், ஹொரநாடு,ஸ்ரிங்கேறி,உடுப்பி,தர்மஸ்தலா,சுப்ரமண்யா மற்றும் கொல்லூர் வரை சென்று வருகிறார்கள்.
ஆனால்.இவை அனைத்திற்கும் மேல் ,அருமையான அருவிகள்,மலைகள், காடுகள் என இயற்கை அங்கே  'ஆனந்த தாண்டவமாடுகிறது '.வருடம் முழுவதும் சென்று வர ஏற்ற இடம் 'கர்நாடகம் '.மழை காலம் முடிந்த பிறகு சென்றால் அருவிகளின் அழகைக்கான கண் கோடி போதாது. குறிப்பாக "ஜோக்,சிவசமுத்திரம்,உஞ்சாளி,ஹபே .இருப்பு & அப்பே " நீர்வீழ்ச்சிகள் பிரமாதம்.கர்நாடகத்தை முழுவதுமாக பார்க்க 10 நாட்கள் போதாது.15 நாட்களில் முயற்சி செய்யலாம். இல்லையெனில், இரண்டு பாகமாக பிரித்து தனித்தனியே பார்க்கலாம்.

கையில் வாகனம் அவசியம்.
ஜூலை மாதம்,எனது  Cousins  மற்றும்  ஒரு நண்பருடன்,ஒரு வாரம் Tour சென்றிருந்தேன்.அங்கே எடுத்த pics உடன் ஒவ்வொரு இடமாக சென்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். Pics.-லியே முடிந்தவரை Caption மூலமாக அனுபவங்களை சொல்வதினால்,அதிகம் எழுத தேவை இல்லையென நினைக்கறேன்.

Sunday, 7 November 2010

போவோமா...ஊர்கோலம்...!!

வணக்கம்.முதல் முயற்சி.
நான் தமிழில் ரொம்பவே 'Weak'.'ன''ண' 'ர' ' ற' பயன்படுத்தும் முறை இன்னமும் எனக்கு தடுமாற்றம்தான். எனவே, தயவுசெய்து என்னுடைய தமிழை மன்னித்தருளவும். என்றாலும், என்னுடைய தாய்மொழிப்பற்றை குறைத்து எடை போடவேண்டாம்.
'ஊர்சுத்தி ' என்று என்னை சொன்னால்,நான் கோபித்துக்கொள்ளமாட்டேன். அந்தளவுக்கு ஊர் சுத்த பிடிக்கும்.அதுவும் 'புதுப்புது-போகாத' இடங்கள் என்றால் 'கொள்ளை'பிரியம். மொழி,உணவு எனக்கு பிரச்னை இல்லை.
16 வயதில் தனியாக 'டெல்லி' சென்று 'நியூ டெல்லி' ஸ்டேஷன் இல் 'பேந்த-பேந்த' முழித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அன்று துவங்கி இன்றுவரை என்னுடைய பயணங்களும் அதற்கான ஆர்வமும்  குறைந்தபாடில்லை. இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இறைவன் அருளில் கடைசி பயணம் வரை இது நடக்குமேயானால் மிக்க மகிழ்ச்சி.அறிவியல் முன்னேற்றத்தில் இப்படி பார்த்து ரசித்த அனுபவங்களை 'Blog' இல் பதிவு செய்வது என்று என்றைக்கோ முடிவு எடுத்திருந்தாலும்,அது இப்போது தான் நிறைவேறுகிறது.குறைகள், நிறைகள் எதுவாயினும் அருட்கூர்ந்து feedback தரவும். நன்றி.