"ஹெப்பே" நீர்வீழ்ச்சி
KR Hills இல் மதிய உணவை முடித்துக்கொண்டு தனி வாடகை ஜீப் வைத்துகொண்டு சென்று வந்தோம்.[நாம் செல்லும் வாகனத்திற்கு அனுமதி இல்லை.]அனுமதி கொடுத்தாலும் அதால் போக முடியாது. ஏனெனில் , சுமார் 1okm தூரம் உள்ள இவ்விடத்திற்கு சாலை என்பதே கிடையாது.வெறும் மண் பாதை தான்."குண்டும் குழியும் கண்ணனுக்கு வெளிச்சம்" என்று சொல்லி போக வேண்டியது தான். அவசர உதவிக்கு கூட ஆள் கிடையாது.ஜீப் பயணம் முடிந்தபின் "கொஞ்ச தூரம்தான் ..இப்படியே நடந்து போங்கள்" என்று ஜீப் டிரைவர் சொல்லிவிட்டான். ஆனால், அந்த கொஞ்ச தூரமும் [சுமார் 2km ], தன்னந்தனியே நாலவர் மட்டும் சென்ற போது ஏற்பட்ட "பீதி" இருக்கிறதே.. இப்போது நினைத்தாலும்...சிலிர்க்கிறது.!!
ஆனால், அனைத்தையும் மீறி , அருவியை பார்த்த அனுபவம் இருகிறதே.. "பார்த்தாலே பரவசம்" தான்..நிறைய close -up pics எடுக்கமுடியவில்லை.. "சாரலினால்"..!! Pics களை வழக்கம் போல Slide show வில் பார்க்கலாம். நன்றி.
No comments:
Post a Comment