Thursday, 9 December 2010

"ஹெப்பே" நீர்வீழ்ச்சி


                                                        "ஹெப்பே"  நீர்வீழ்ச்சி  

"கெம்மனகுண்டி"யின் முக்கிய இடமே "ஹெப்பே " falls   தான் .ஆனால், அதை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. " ஆயிரத்தில் ஒருவன்"[புதிது] சினிமாவில் வருவது போல் 2 மலை,3 ஓடை,அடர்த்தியான காடு, வனவிலங்குகள் என அனைத்தையும் சந்தித்து.. தப்பித்து ..போய் பார்க்கவேண்டும்..கிட்டத்தட்ட நம்ம ஊரில் "தேனருவி" செல்ல குற்றாலத்தில் trek செய்வோமே ..அதுபோல..!! தேனருவியிலாவது  வனவிலங்குகளின் பயம் கிடையாது.ஜன நடமாட்டம் எப்போதும் இருக்கும்.இங்கே அதுவும் இல்லை. ஆனால்,கடைசியில், அருவியை அடையும்போது ஏற்படும்  மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை.இமய மலை ஏறியது போல் ஒரு பெருமிதம் மிஞ்சுகிறது.சரியான மழைக்காலத்தில் சென்றதால்.. அருவியின்  full bloom பார்க்கமுடிந்தது.அதே காரணத்தால் ஈ-காகா கூட மக்கள் இல்லை.
KR Hills இல் மதிய உணவை முடித்துக்கொண்டு  தனி வாடகை ஜீப் வைத்துகொண்டு சென்று வந்தோம்.[நாம் செல்லும் வாகனத்திற்கு   அனுமதி இல்லை.]அனுமதி கொடுத்தாலும் அதால் போக முடியாது. ஏனெனில் , சுமார்  1okm தூரம் உள்ள இவ்விடத்திற்கு சாலை என்பதே கிடையாது.வெறும் மண் பாதை தான்."குண்டும் குழியும் கண்ணனுக்கு வெளிச்சம்" என்று சொல்லி போக வேண்டியது தான். அவசர உதவிக்கு கூட ஆள் கிடையாது.ஜீப் பயணம் முடிந்தபின் "கொஞ்ச தூரம்தான் ..இப்படியே நடந்து போங்கள்" என்று ஜீப் டிரைவர் சொல்லிவிட்டான். ஆனால், அந்த கொஞ்ச தூரமும் [சுமார் 2km ], தன்னந்தனியே நாலவர் மட்டும் சென்ற போது ஏற்பட்ட "பீதி" இருக்கிறதே.. இப்போது நினைத்தாலும்...சிலிர்க்கிறது.!!
ஆனால், அனைத்தையும் மீறி , அருவியை பார்த்த அனுபவம் இருகிறதே.. "பார்த்தாலே பரவசம்" தான்..நிறைய close -up pics எடுக்கமுடியவில்லை.. "சாரலினால்"..!! Pics களை வழக்கம் போல Slide show வில் பார்க்கலாம். நன்றி.


Tuesday, 7 December 2010

"கெம்மனகுண்டி"

"கெம்மனகுண்டி"
 
ஏதோ அசிங்கமாக எழுத ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம் . கர்நாடகத்தில்  'சிக்மகளூர்' அருகே உள்ள அருமையான மலைப்பிரதேசம்தான்  இந்த இடம். "கெம்மனகுண்டி"  என்பது 'நீலகிரி'  போல ஒரு மலைத்தொடர். யாரும் அதிகம் அறியாத அதிகம் செல்லாத இடங்கள் தான் இம்மலைப்ரதேசம்.பொழுதோடு ,'சிக்மகளுரி' லிருந்து    கிளம்பி மலை ஏறினால்[வாகனத்தில்], மாலைக்குள் பத்திரமாக கீழே இறங்கிவிடலாம். நடுவில் எண்ணற்ற locations  .., அருவிகள், பள்ளத்தாக்கு, பசுமை பிரதேசங்கள்...என ஆஹா..ஆஹா. சொர்கமடா சாமி..!! 


"முள்ளயன்கிரி"

'சிக்மகளூர்' லிருந்து செல்லும்போது வரும் முதல் இடம் "முள்ளயன்கிரி" . இங்கே அருமையான பள்ளத்தாக்கு viewpoint உள்ளது. Trekking செல்ல கூட பாதை உள்ளது. நாங்கள் மழை காலத்தில் சென்றதால் கடுமையான குளிர் காற்று புயலாய் வீசியது. நிற்க முடியவில்லை. விட்டால் ஆளை தூக்கிவ்டும்  என்பதில் ஐயமில்லை. எனவே, கொஞ்சம்  pics உடன் இடத்தை மனம் கேட்காமல் காலி செயய்தோம்;'மீண்டும் வருவோம் 'என்று  சூளுரைத்து.


"அட்டிகுண்டி"
 
இது  பயணத்தில் அடுத்து வரும்  இடம்.இங்கே அருவி  இயற்கையாய்  விழுவதை  dam போல்   வடிவமைத்திருக்கிரர்கள்.   சிறு கோவில் உள்ளது. குளிக்க ஏற்ற இடம். ஒரே ஒரு tea கடையும்  உண்டு.

KR Hill 

கிருஷ்ண ராஜேந்திர Hill என்று அழைக்கப்படும் இந்த இடம்தான் கெம்மனகுண்டியின் Midpoint என்று சொல்லலாம். இங்கு தங்கும்  மற்றும்  உணவு வசதி உள்ளது.அருமையனா  Horticulture மலைச்சரிவில்  அமைத்திருகிறார்கள். Season time -இல் [மே-ஜூன்], நம்மூர் ஊட்டி போன்று தங்க இடம் கிடைபதெல்லாம் குதிரை கொம்புதான். பனிமூட்டத்துடன் இங்கே கண்ட இயற்கை காட்சிகள் இன்னமும் கண்ணில் நிற்கின்றன. 
 பயணத்தின் இடையே.. இயற்கையை ரசித்த சில இடங்களையும் பெயரில்லா அருவிகளையும்  படங்களில்[Slide show]காண்க. நன்றி.

Friday, 3 December 2010

பேலூர்-ஹலேபேத்

பேலூர் - ஹலபேத்  'ஹசன்' லிருந்து  35km தொலைவில் உள்ளது. இரண்டிடங்களுகும் இடையே  13km தூரம்." ஹொய்சாலா" சாம்ராஜ்யத்தின் பிரதான  கோவில்கள் இவை. சிற்ப கலைகளின் உச்சத்தை இங்கே காணலாம். அற்புதமான வடிவமைப்பு. நிறைய சினிமாக்களில் தோன்றும் இவ்விடங்களை நேரில் சென்று பார்க்கும் போது பரவசமாக இருக்கிறது. Guide வைத்து பார்த்தால் உத்தமம்.
மொத்தத்தில் சரவணபெலகோலா,பேலூர் மற்றும் ஹலேபிட் பார்க்க ஒரு நாள் நிச்சயம் வேண்டும்.[வாகன வசதியுடன்]. பயணத்தின் இடையே சாலைகள் ஓரம் வயல் வெளியில் சாமந்திபூக்களும்  சூரியகாந்தி பூக்களும் [ தோட்டங்கள்] கண்களை ஆர்பரிக்கன்றன.அவசியம் அவ்விடங்களிலும் நின்று பூக்களின் அழகை ரசிக்கவும்.
சரித்திர முக்கியத்துவம் நிறைய உள்ள இவ்விடங்களை  சரித்திரமும் தெரிந்து பார்க்க வேண்டுமானால் அதற்கான website கள் நிறைய இருக்கின்றன.அங்கே படித்துவிட்டு பார்க்கலாம்.நாங்கள் சென்ற போது நல்ல மழை. அங்கே ரசித்து எடுத்த picsகளை இங்கு picasa web-link ஆக கொடுத்து இருக்கிறேன். உங்கள் feedback களை தாரளமாக எழுதலாம்.நன்றி.


Thursday, 2 December 2010

சரவணபெலகோலா

பெங்களுரு லிருந்து சுமார் 155km தூரத்தில் உள்ள  'ஜைன' மத ஸ்தலம் . 3மணி நேர பயணம். 'ஹசன்'  பக்கத்தில் உள்ளது.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி 'பஹுபலி ' சிலை. 'கோமேதேஷ்வர்' என்றும் அழைக்கபடுகிறது. அழகான  சின்ன  ஊர். ஊர் நடுவில் தெப்பகுளம்.பின்புறமும் மலை. அங்கே அழகிய கோயில் ஒன்று உள்ளது."மகாவீர் ஜெயந்தி " இங்கே சிறப்பாக கொண்டாடபடுகிறது.12 வருடங்குளுக்கு  ஒரு முறை  கும்பாபிஷேகமும் நடக்கிறது. கர்நாடகத்தில் பரவலாக நிறைய இடங்களில் இந்த சிலையை காணலாம்.மலை ஏறி இறங்க 2 மணிநேரம் ஆகலாம்.
இங்கே நாங்கள் சென்றபோது எடுத்த pics -களை  Picasa   ஆல்பமாக   இந்த லிங்க் இல்  தொகுத்திருக்கிறேன் . பார்க்கவும்.நன்றி.








Wednesday, 10 November 2010

கர்நாடகம்.

கர்நாடகம்.எவ்வளவு முறை சென்றாலும் சலிக்காத மாநிலம்.
அவ்வளவு இயற்கை வளம். இனிமையான மனிதர்கள்.'காவிரி' பிரச்னையினால் வேற்றுமை-வெறுப்பு ஏற்பட்டாலும் , அதையும் கடந்து பார்த்தால்,அது ஒரு 'tourist paradise ' என்றால் மிகையல்ல. அனேகம்பேர் Bangalore-Mysore தான் கர்நாடகாவில் சுற்றுலா இடங்கள் என நினைக்கிறார்கள்.இன்னும் சிலர் ,குடகு, பேலூர்,ஹலேபெட், ஹொரநாடு,ஸ்ரிங்கேறி,உடுப்பி,தர்மஸ்தலா,சுப்ரமண்யா மற்றும் கொல்லூர் வரை சென்று வருகிறார்கள்.
ஆனால்.இவை அனைத்திற்கும் மேல் ,அருமையான அருவிகள்,மலைகள், காடுகள் என இயற்கை அங்கே  'ஆனந்த தாண்டவமாடுகிறது '.வருடம் முழுவதும் சென்று வர ஏற்ற இடம் 'கர்நாடகம் '.மழை காலம் முடிந்த பிறகு சென்றால் அருவிகளின் அழகைக்கான கண் கோடி போதாது. குறிப்பாக "ஜோக்,சிவசமுத்திரம்,உஞ்சாளி,ஹபே .இருப்பு & அப்பே " நீர்வீழ்ச்சிகள் பிரமாதம்.கர்நாடகத்தை முழுவதுமாக பார்க்க 10 நாட்கள் போதாது.15 நாட்களில் முயற்சி செய்யலாம். இல்லையெனில், இரண்டு பாகமாக பிரித்து தனித்தனியே பார்க்கலாம்.

கையில் வாகனம் அவசியம்.
ஜூலை மாதம்,எனது  Cousins  மற்றும்  ஒரு நண்பருடன்,ஒரு வாரம் Tour சென்றிருந்தேன்.அங்கே எடுத்த pics உடன் ஒவ்வொரு இடமாக சென்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். Pics.-லியே முடிந்தவரை Caption மூலமாக அனுபவங்களை சொல்வதினால்,அதிகம் எழுத தேவை இல்லையென நினைக்கறேன்.

Sunday, 7 November 2010

போவோமா...ஊர்கோலம்...!!

வணக்கம்.முதல் முயற்சி.
நான் தமிழில் ரொம்பவே 'Weak'.'ன''ண' 'ர' ' ற' பயன்படுத்தும் முறை இன்னமும் எனக்கு தடுமாற்றம்தான். எனவே, தயவுசெய்து என்னுடைய தமிழை மன்னித்தருளவும். என்றாலும், என்னுடைய தாய்மொழிப்பற்றை குறைத்து எடை போடவேண்டாம்.
'ஊர்சுத்தி ' என்று என்னை சொன்னால்,நான் கோபித்துக்கொள்ளமாட்டேன். அந்தளவுக்கு ஊர் சுத்த பிடிக்கும்.அதுவும் 'புதுப்புது-போகாத' இடங்கள் என்றால் 'கொள்ளை'பிரியம். மொழி,உணவு எனக்கு பிரச்னை இல்லை.
16 வயதில் தனியாக 'டெல்லி' சென்று 'நியூ டெல்லி' ஸ்டேஷன் இல் 'பேந்த-பேந்த' முழித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அன்று துவங்கி இன்றுவரை என்னுடைய பயணங்களும் அதற்கான ஆர்வமும்  குறைந்தபாடில்லை. இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இறைவன் அருளில் கடைசி பயணம் வரை இது நடக்குமேயானால் மிக்க மகிழ்ச்சி.அறிவியல் முன்னேற்றத்தில் இப்படி பார்த்து ரசித்த அனுபவங்களை 'Blog' இல் பதிவு செய்வது என்று என்றைக்கோ முடிவு எடுத்திருந்தாலும்,அது இப்போது தான் நிறைவேறுகிறது.குறைகள், நிறைகள் எதுவாயினும் அருட்கூர்ந்து feedback தரவும். நன்றி.