வணக்கம்.முதல் முயற்சி.
நான் தமிழில் ரொம்பவே 'Weak'.'ன''ண' 'ர' ' ற' பயன்படுத்தும் முறை இன்னமும் எனக்கு தடுமாற்றம்தான். எனவே, தயவுசெய்து என்னுடைய தமிழை மன்னித்தருளவும். என்றாலும், என்னுடைய தாய்மொழிப்பற்றை குறைத்து எடை போடவேண்டாம்.
'ஊர்சுத்தி ' என்று என்னை சொன்னால்,நான் கோபித்துக்கொள்ளமாட்டேன். அந்தளவுக்கு ஊர் சுத்த பிடிக்கும்.அதுவும் 'புதுப்புது-போகாத' இடங்கள் என்றால் 'கொள்ளை'பிரியம். மொழி,உணவு எனக்கு பிரச்னை இல்லை.
16 வயதில் தனியாக 'டெல்லி' சென்று 'நியூ டெல்லி' ஸ்டேஷன் இல் 'பேந்த-பேந்த' முழித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அன்று துவங்கி இன்றுவரை என்னுடைய பயணங்களும் அதற்கான ஆர்வமும் குறைந்தபாடில்லை. இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இறைவன் அருளில் கடைசி பயணம் வரை இது நடக்குமேயானால் மிக்க மகிழ்ச்சி.அறிவியல் முன்னேற்றத்தில் இப்படி பார்த்து ரசித்த அனுபவங்களை 'Blog' இல் பதிவு செய்வது என்று என்றைக்கோ முடிவு எடுத்திருந்தாலும்,அது இப்போது தான் நிறைவேறுகிறது.குறைகள், நிறைகள் எதுவாயினும் அருட்கூர்ந்து feedback தரவும். நன்றி.
வாங்க ... வந்து எழுதுங்க ..நல்லா எழுதுங்க ... நாங்களும் படிப்போம் / பாராட்டுவோம். உன்னோட முயற்சிக்கு என் தரப்பில் வாழ்த்துக்கள்
ReplyDeletesuperna
ReplyDeleteVAAZHGA UN THAMIZH PULAMAI
ReplyDeleteWelcome to blog world my friend. Keep it up. Blogukkaagave innum neriya oor suththu maapille...
ReplyDeleteenna anna oorkolam ninnuduthu???
ReplyDeleteஊர் சுற்றவே லாயக்கில்லாதவனின் வாழ்த்துகள். உங்கள் பிகாஸா ஆல்பங்களால் பதிவை வண்ணமயமாக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஅருள் கூர்ந்துவிட்டேன் :-) (எதுக்கு இந்த தன்னடக்கம்?)